பாகிஸ்தானில் ஒரு கெளரவக்கொலை. சகோதரரால் கொலை செய்யப்பட்ட மாடல் அழகி

8534கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின்போது இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டி மார்ச் 19ஆம் தேதி நடைபெற்றது.

இந்த போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றால் நிர்வாணமாக நடனமாட தயார் என்று பாகிஸ்தான் மாடல் அழகி குவாண்டீல்பலோச் சவால் விட்டிருந்தார். இந்த போட்டியில் பாகிஸ்தான் தோல்வி அடைந்தது என்பது வேறு விஷயம்

இந்நிலையில் இன்று மாடல் அழகி குவாண்டீல்பலோச் அவரது சகோதரரால் படுகொலை செய்யப்பட்டார். தொடர்ச்சியாக குவாண்டீல்பலோச் ஃபேஸ்புக்கில் சர்ச்சைக்குரிய வகையிலான புகைப்படங்களை பதிவு செய்து வந்ததால் அவரது சகோதரரால் கெளரவக் கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

Leave a Reply