பாகிஸ்தான் நல்ல நாடு என்று கூறிய நடிகைக்கு பாஜக எதிர்ப்பு
பிரபல நடிகையும் முன்னாள் காங்கிரஸ் கட்சியின் எம்பியுமான ரம்யா, சமீபத்தில் கனண்ட தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “‘பாகிஸ்தானில் நடைபெற்ற ‘சார்க் நாடுகளின் இளம் நாடாளுமன்ற உறுப்பினர்கள்’ கருத்தரங்கில் கலந்துக்கொண்டேன். அங்குள்ள மக்கள் நம்மைப் போலவே சாதா ரணமாக வாழ்கின்றனர். இந்தியா வில் இருந்து சென்ற எங்களுடன் மிகுந்த நட்புடன் பழகினர். பாகிஸ்தானுக்கு செல்வது நரகம் செல்வதற்கு ஒப்பானது என மத்திய அமைச்சர் மனோகர் பாரிக்கர் கூறியது போல அந்நாடு இல்லை. நல்ல நாடாகவே இருக்கிறது’’ என்று கூறியிருந்தார்.
பாகிஸ்தான் நாட்டால் கடந்த ஐம்பது வருடங்களுக்கும் மேலாக இந்தியா பலவிதமான பிரச்சனைகளை சந்தித்து வரும் நிலையில் அந்த நாட்டை நல்ல நாடு என்று கூறிய நடிகை ரம்யாவுக்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து பாஜகவின் பிரபமுகரும் நடிகருமான ஜக்கேஷ் கூறியபோது ‘பாகிஸ்தான் நல்ல நாடு என நற்சான்றிதழ் வழங்கியுள்ள ரம்யா காங்கிரஸ் தலைவர்கள் சோனியா மற்றும் ராகுல் காந்தியை அங்கு குடியேற சொல்வாரா?’’ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இதற்கு பதிலளித்துள்ள ரம்யா, ‘‘‘அண்மையில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், பாகிஸ்தான் நம்முடைய சகோதர நாடு என தெரிவித்தார். பிரதமர் நரேந்திர மோடியும் அவ்வப்போது பாகிஸ்தான் சென்று வருகிறார். எனக்கு எதிராக போராடும் பாஜகவினர், மோகன் பகவத் மற்றும் மோடிக்கு எதிராகவும் போராடுவார்களா? என்று கேட்டுள்ளார்.