நவாஸ் ஷெரிப் தலைமையிலான பாகிஸ்தான் அரசு இன்று இந்திய பத்திரிகையாளர்கள் இரண்டு பேர்களை ஒரு வாரத்திற்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என கெடு விதித்துள்ளது. இதனால் இந்திய பாகிஸ்தான் உறவுகளில் பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது.
இந்திய பத்திரிகையாளர்களை சந்தேகமாகவே பார்த்துவரும் பாகிஸ்தான் அரசு, பாகிஸ்தானில் தங்கி செய்திகள் சேகரித்து வரும் “தி இந்து” மற்றும் பிடிஐ பத்திரிகைகளை சேர்ந்த மீரா மேனன் மற்றும் அலெக்ஸ் பிலிப்ஸ் ஆகிய இருவரையும் ஒரு வாரத்திற்குள் நாட்டை விட்டு வெளியேற உத்தரவு பிறப்பித்துள்ளது. வெளியேற்றுவதற்கான காரணத்தை பாகிஸ்தான் விளக்கவில்லை.
பாகிஸ்தானில் உள்ள மற்ற நாட்டு பத்திரிகையாளர்களும் எந்த நேரத்தில் வெளியேற்றப்பட வாய்ப்பு உள்ளதாகவும், இந்திய பத்திரிகையாளர்களுக்கு ஆபத்து அதிகம் இருப்பதாகவும் பாகிஸ்தானில் இருந்து வரும் செய்திகள் உறுதிப்படுத்துகின்றன