இம்ரான்கான் வேட்புமனு தள்ளுபடி: பிரதமர் கனவு கலைகிறதா?

இம்ரான்கான் வேட்புமனு தள்ளுபடி: பிரதமர் கனவு கலைகிறதா?
பாகிஸ்தான் பாராளுமன்ற தேர்தல் ஜூலை மாதம் 25-ம் தேதி நடக்க உள்ள நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும் தெரிக் இ இன்சாப் கட்சி தலைவர் இம்ரான்கான் இஸ்லாமாபாத் தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் அவரது மனு திடீரென நேற்று தள்ளுபடி செய்யப்பட்டது. இதேபோல் பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் ஷாகித் கான் அப்பாஸியின் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. 
பாகிஸ்தானின் அடுத்த பிரதமராக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட இருவரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக இம்ரான்கானின் நீண்டநாள் பிரதமர் கனவு கலைகிறதாக கூறப்படுகிறது
இம்ரான்கான், ஷாகித்கான் ஆகியோர்களின் வேட்புமனுவில் பல்வேறு தகவல்களை சரியாக பூர்த்தி செய்யவில்லை என்றும், அதனால்தான் அவர்களது வேட்புமனுக்கள் தேர்தல் அலுவலரால் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால் தங்கள் வேட்புமனுவை நிராகரித்ததை எதிர்த்து தேர்தல் தீர்ப்பாயத்தில் முறையிட உள்ளதாக இருவரும் தெரிவித்துள்ளனர். 

Leave a Reply