‘பனாமா பேப்பர்ஸ்’ பட்டியலில் இருந்து திடீரென நவாஸ் ஷெரிப் பெயர் நீக்கப்பட்டது ஏன்? பரபரப்பு தகவல்
கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியான பனாமா பட்டியல் உலகில் உள்ள முக்கிய அரசியல் தலைவர்கள், திரை நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள் என பல விவிஐபிக்களை சங்கடத்தில் ஆழ்த்தியது. ரஷ்ய அதிபர் புதின் முதல் நம்மூர் அமிதாப்பச்சன் வரை இந்த பட்டியலில் இடம்பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. கணக்கில் வராத பலகோடி ரூபாய் சொத்துக்களை பனாமா நாட்டில் பதுக்கி வைத்திருப்பதாக வெளிவந்த பட்டியல்தான் ‘பனாமா பேப்பர்ஸ்’ என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்த பட்டியலில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் குடும்பத்தினர் பெயர்களும் இடம் பெற்றிருந்ததால் அந்நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்பட்டது. ஆனால் இந்த குற்றச்சாட்டை நவாஸ் ஷெரீப் உறுதியாக மறுத்தார். இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்த நிலையில் தற்போது திடீரென நவாஸ் ஷெரீப்பின் குடும்பத்டினர் பெயர் தவறுதலாக சேர்க்கப்பட்டதாக சர்வதேச ஊடகவியலாளர்களின் விசாரணை கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் பெயரை பனாமா பேப்பர்ஸ் பட்டியலில் இருந்தும் அந்த அமைப்பு நீக்கி விட்டது. மேலும் ஷெரிப் எந்தவித வரி ஏய்ப்பும் செய்யவில்லை என்றும், இணையதளத்தில் பதிவுசெய்யும் போது ஏற்பட்ட எடிட்டிங் தவற்தான் இந்த குழப்பத்திற்கு காரணம் என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.