பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் தாயாருக்கு இந்திய பிரதமர் மோடி, சால்வை ஒன்றை பரிசாக கொடுத்தார். அந்த பரிசை பெற்றுக்கொண்ட பின்னர் நவாஸ் ஷெரிப்பின் மகள் மோடிக்கு நன்றி தெரிவித்தார். இந்நிலையில் அதற்கு பதிலாக மோடியின் தாயாருக்கு நேற்று நவாஸ் ஷெரிப் சேலை ஒன்றை பரிசாக அனுப்பியுள்ளார்.
இதுகுறித்து நேற்று டுவிட்டரில் நன்றி தெரிவித்த பிரதமர் மோடி, “பாகிஸ்தான் பிரதமர் அழகிய வெள்ளை சேலை ஒன்றை எனது தாயாருக்கு அனுப்பியுள்ளேன். அவருக்கு நான் மிகவும் நன்றிக்கடன் பட்டுள்ளேன். என்று கூறியுள்ளார்.
பரம எதிரியாக இருந்த பாகிஸ்தானை ஒரு சால்வை கொடுத்து நட்பு நாடாக்கிவிட்டார் பிரதமர் என்று மோடிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. அவருடைய டுவிட்டர் பக்கத்தில் ஏராளமானோர் பதில் கருத்து தெரிவித்துள்ளனர். எதிர்காலத்தில் இந்தியா-பாகிஸ்தான் நெருங்கிய நட்பு நாடாக மாறுவதற்கு இது ஒரு ஆரம்பம் என்று இந்தியர் அனைவரும் கருதுகின்றனர்.