நேற்று நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி தோல்வியை நோக்கி சென்று கொண்டிருந்த போது பாகிஸ்தானை சேர்ந்த பி.டிவி நிறுவனம், இந்திய அணியை தீ கக்கும் டைனசர் அழிப்பது போல, ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் மிட்செல் ஜான்சனை சித்தரித்து ஒரு படத்தை வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேன்கள் ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர்களின் விக்கெட்டுகளை ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் மிட்செல் ஜான்சன் அபாரமாக வீழ்த்தினார். இந்த தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட துணை கேப்டன் விராட் விராத் கோஹ்லி ஒரு ரன் எடுத்த நிலையில் மிட்செல் ஜான்சன் பந்தில், விக்கெட் கீப்பர் ஹாடினிடம் பிடிகொடுது அவுட் ஆனார்.
இதனால் ஆஸ்திரேலிய அணியிடம் இந்திய அணி தோல்வியை நோக்கி சென்று கொண்டிருந்ததை அறிந்த பாகிஸ்தானை சேர்ந்த பி.டிவி, மிட்செல் ஜான்சன் நெருப்பை கக்குவது போன்ற இந்த படத்தை வெளியிட்டுள்ளது. இந்த படத்திற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள் பெரும் வரவேற்பையும் இந்திய ரசிகர்கள் கடும் கண்டனத்தையும் வெளியிட்டனர்/.