போலி ஆவணங்கள் தாக்கல் செய்தால் 7 ஆண்டு ஜெயில்: நவாஸ் செரீப்புக்கு நீதிமன்றம் எச்சரிக்கை
பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் செரீப் மற்றும் அவரது குடும்பத்தினர் ஊழல் செய்ததாக அந்நாட்டின் ‘பினாமாகேட்’ என்ற பத்திரிகை வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கில் முன் ஆஜரான நவாஸ் செரீப்பின் மகள் மரியம் நவாஸ், மகன் உசேன் நவாஸ் ஆகியோர் போலியான ஆவணங்கள் தாக்கல் செய்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட் நவாஸ் செரீப் மற்றும் அவரது குடும்பத்தினர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுபோன்ற போலியான ஆவணங்கள் தாக்கல் செய்தால் 7 ஆண்டுகள் ஜெயில் தண்டனை உறுதி என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் பாகிஸ்தானில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.