பாகிஸ்தானை இந்தியா நான்காக பிரிக்க வேண்டும்: சுப்பிரமணியன் சுவாமி
பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில் இன்று ஒரு உருப்படியான கருத்தை தெரிவித்துள்ளார். அதாவது பாகிஸ்தான் மீது இந்தியா போர் தொடுக்க வேண்டும் என்றும், அதற்கு முன்னர் பாகிஸ்தானை நான்கு பாகங்களாக பிரிக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா போர் தொடுக்கும் போது அதை நான்கு பாகங்களாக பிரிக்க வேண்டும். உடனடியாக போர் தொடுக்க வேண்டும் என்று நான் கூறவில்லை. ஆனால், போர் தொடுப்பதற்கான பணிகளில் தீவிரமாக இறங்க வேண்டும். அண்டை நாடுடனான மோதலுக்கு, அதை உடைப்பது மட்டுமே ஒரே தீர்வு ஆகும்” என்றார்.
இந்திய ராணுவம் நேற்று நடத்திய சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தியதில் மூன்று பாகிஸ்தான் வீரர்கள் பலியாகினர். இது பற்றி சுப்ரமணியன் சுவாமியிடம் கேட்ட போது, “ இது சரியானது தான், ஆனால், நிரந்தர தீர்வு வேண்டும். பாகிஸ்தானை பிரிக்க வேண்டியது அவசியம்” என்று அவர் தெரிவித்தார்