இலங்கை, பாகிஸ்தான் அணிகளுக்கிடையே அபுதாபி மற்றும் சார்ஜாவில் நடந்து வரும் ஐந்து ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் முதல் மூன்று போட்டிகள் முடிவடைந்த நிலையில் நேற்று நான்காவது போட்டி அபுதாபியில் இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு நடந்தது. இந்த போட்டியில் அபாரமாக விளையாடிய பாகிஸ்தான் அணி இலங்கையை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. ஏற்கனவே இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள பாகிஸ்தான் நேற்றைய போட்டியிலும் வெற்றி பெற்றதால் தொடரை வென்றது.
டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி பாகிஸ்தானின் அபார பந்துவீச்சுக்கு தாக்கு பிடிக்க முடியாததால் 48.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 225 ரன்களே எடுத்தது. சங்கரகரா, 51 ரகளும், பிரியஞ்சன் 74 ரன்களும், மாத்யூஸ் 38 ரன்களும் எடுத்தனர்.
பின்னர் மிக எளிய இலக்கை விரட்டிய பாகிஸ்தான் அணி, முகமது ஹபீஸ்ஸி அபார சதத்தால் 41.1 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கள் மட்டுமே இழந்து 226 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. 113 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த முகமது ஹபீஸ் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஐந்து போட்டிகள் கொண்ட இந்த தொடரில் பாகிஸ்தான் 4-1 என்ற கணக்கில் முன்னிலை வகித்து தொடரை வென்றது. ஐந்தாவது மற்றும் இறுதி ஒருநாள் கிரிக்கெட் போட்டி நாளை 27ஆம் தேதி, இதே அபுதாபி மைதானத்தில் நடைபெறும்.
ஸ்கோர் விபரம்:
இலங்கை அணி : 48.5 ஓவர்களில் 225/10
பாகிஸ்தான் அணி : 41.1 ஓவர்களில் 226/2