பாகிஸ்தான் பிரதமராக ஷாஹித் அப்பாஸி தேர்வு!!

பாகிஸ்தான் பிரதமராக ஷாஹித் அப்பாஸி தேர்வு!!

பாகிஸ்தான் பிரதமராக முன்னாள் பெட்ரோலியத்துறை அமைச்சர் ஷாஹித் ககன் அப்பாஸியை பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (என்) தேர்வு செய்துள்ளது.

பனாமா வழக்கில் பாகிஸ்தான் பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீப் கடந்த வாரம் பதவியை இழந்தார். வெளிநாட்டில் சொத்து வாங்கிக் குவித்தது, முதலீடு செய்தது தொடர்பான பனாமா வழக்கில் நவாசின் குடும்பத்திற்கு தொடர்பு இருக்கிறது என்றும், ஆதலால் அவர் பிரதமர் பதவியில் நீடிக்கும் தகுதியை இழக்கிறார் என்றும், இந்தக் குற்றத்தின் கீழ் பதவியில் இருந்து அவரை தகுதி நீக்கம் செய்வதாக அந்த நாட்டின் உச்சநீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து நவாஸ் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

அந்த நாட்டின் நாடாளுமன்றத்தில் மெஜாரிட்டியுடன் நவாசின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி இருப்பதாலும், அடுத்த ஆண்டு மே மாதம் வரை பதவியில் நீடிக்கலாம் என்றபட்சத்தில் அந்த நாட்டின் பிரதமராக ஷாஹித் அப்பாஸியை அந்தக் கட்சி தேர்வு செய்துள்ளது.

நாடாளுமன்றத்தின் மொத்தமுள்ள 341 வாக்குகளில் 221 வாக்குகள் பெற்று ஷாஹித் வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட மூவரும் சேர்ந்து மொத்தமே 84 வாக்குகளைப் பெற்று இருந்தனர்.

நவாசின் சகோதரர் ஷபாஸ் ஷெரீப் நாடாளுமன்றத்துக்கு தேர்வு செய்த பின்னர், பிரதமர் பதவியில் இருந்து ஷாஹித் அப்பாஸி விலகுவார். அதுவரை அவர் பிரதமர் பதவியில் நீடிப்பார். பஞ்சாப் மாகாணத்தின் முதல்வராக ஷபாஸ் ஷெரீப் இருந்து வருகிறார்.

Leave a Reply