இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இரண்டு இளம்பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு மரத்தில் தொங்கவிடப்பட்ட கொடூர சம்பவத்தை போலவே, நேற்று பாகிஸ்தானிலும் ஒரு சம்பவம் நடந்துள்ளது. இதுகுறித்து பாகிஸ்தான் போலீஸார் புலன்விசாரணை செய்து வருகின்றனர்.
பாகிஸ்தானில் உள்ள லாயா என்ற பகுதியில் உள்ள கிராமத்தில் முஜாமில் பீபீ என்ற 20 வயது பெண் ஒருவர் பாலிய பலாத்காரம் செய்யப்பட்டு, அதன்பின்னர் மரத்தில் தொங்கவிடப்பட்டுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த கிராம மக்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து, குற்றவாளியை தேடி வருகின்றனர். இந்த வழக்கை விசாரணை செய்துவரும் காவல்துறை உயரதிகாரி சதாகத் அலி சோஹான் என்பவர் கூறியபோது, ‘தன்னுடைய 22 வருட அனுபவத்தில் இதுபோன்ற கொடுமையான ஒரு வழக்கை சந்தித்ததில்லை என்று கூறினார்.
இளம்பெண் முஜாமில் பீபீயை மூன்று நபர்கள் கூட்டாக சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து மரத்தில் தொங்கவிடப்பட்டுள்ளதாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாகவும், அவர்களை பிடிக்க தனிப்படை அமைத்து தேடிவருவதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
[embedplusvideo height=”400″ width=”600″ editlink=”http://bit.ly/1lIEMnm” standard=”http://www.youtube.com/v/K034P8scfLM?fs=1″ vars=”ytid=K034P8scfLM&width=600&height=400&start=&stop=&rs=w&hd=0&autoplay=0&react=1&chapters=¬es=” id=”ep1340″ /]