பாகிஸ்தான் ராணுவ தளபதி ராஜினாமா

பாகிஸ்தான் ராணுவ தளபதி நியமனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மூத்த துணை தளபதி தனது பதவியை திடீரென்று ராஜினாமா செய்தார்.

பாகிஸ்தான் ராணுவ தளபதியாக இருந்த அஷ்பக் பர்வேஸ் கயானி நேற்று ஓய்வு பெற்றார். இது அந்த நாட்டில் அதிகாரம் மிக்க 3 பெரிய பதவிகளில் ஒன்றாகும். கயானி ஓய்வு பெற்றதையொட்டி புதிய ராணுவ தளபதியாக ரஹீல் ஷெரீப், இணை தலைமை பணியாளர் முழு தலைவராக ரஷாத் மகமது ஆகியோர் நியமிக்கப்பட்டார்கள். பிரதமர் நவாஸ் ஷெரீப் ஒப்புதலுடன் நேற்று முன்தினம் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டது.

தனது சீனியாரிட்டுக்கு கீழ் உள்ள 2 பேரையும் உயர் பதவிக்கு நியமிக்கப்பட்டதை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதனை அடுத்து துணை தளபதி பொறுப்பில் இருந்து ஹாரூன் அஸ்லாம் நேற்று திடீரென்று ராஜிமானா செய்தார். அத்துடன் அவர் பிரதமர் நவாஸ் ஷெரீப் அளித்த விருந்து நிகழ்ச்சியையும் புறக்கணித்தார்.

Leave a Reply