பிரம்மபுத்திரா குறுக்கே அணை. இந்தியாவுக்கு எதிராக சீனாவின் அத்துமீறல்

பிரம்மபுத்திரா குறுக்கே அணை. இந்தியாவுக்கு எதிராக சீனாவின் அத்துமீறல்

1பிரம்மபுத்திரா நதியின் முக்கிய கிளை நதியில் இருந்து இந்தியாவில் உள்ள அசாம், அருணாசல பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கும், வங்காள தேசத்திற்கும் தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் அந்த கிளை நதியில் சீனா தற்போது ஐந்து புதிய அணைகளை கட்ட, சீனா நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனால் இந்தியாவின் வடகிழக்கு மாநிலமும், வங்கதேசமும் பாதிப்பு அடையும் நிலை ஏற்பட்டுள்ளது.

நீர்மின் நிலையத்துக்கான அணை வேலைகள், முக்கிய கட்டத்தை எட்டியிருப்பதால், கிளை நதியின் தண்ணீர் வரத்தை தடுத்து நிறுத்தியுள்ள தாக, சீன ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளது.

உரி ராணுவ முகாம் தாக்குதலை அடுத்து பாகிஸ்தானுடன் ஆன சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை புதுப்பிப்பது குறித்து இந்தியா மறுபரிசீலனை செய்ய முடிவெடுத்துள்ளதால் இந்தியாவிற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தானின் நட்பு நாடான சீனா இவ்வித நடவடிக்கைகளில் இறங்கியுள்ளதாக தெரிகிறது. சீனாவின் அணைகட்டும் முயற்சியை தடுப்பது எப்படி என்பது குறித்து விரைவில் இந்திய, வங்கதேச அதிகாரிகள் ஆலோசனை செய்யவுள்ளனர்.

Leave a Reply