தேவையானவை: பாலக் கீரை – ஒரு கட்டு, சோயா உருண்டைகள் – 10 – 15, இஞ்சி பூண்டு விழுது, மிளகாய்த் தூள், சீரகம் – தலா ஒரு டீஸ்பூன், வெங்காயம் – 1, பச்சைமிளகாய் – 2, பால் – 4 டேபிள்ஸ்பூன், கரம் மசாலா – அரை டீஸ்பூன், மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை, உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.
செய்முறை: கொதிக்கும் நீரில் சோயா உருண்டைகளைப் போட்டு, 10 நிமிடங்கள் வேகவிட்ட பிறகு, குளிர்ந்த நீரில் இரண்டு முறை அலசி, பிழிந்துகொள்ளவும். பாலக் கீரையுடன் பச்சைமிளகாய் சேர்த்து வேகவைத்து, ஆறியதும், விழுதாக அரைத்துக்கொள்ளவும். கடாயில் எண்ணெயைக் காயவைத்து, சீரகம் தாளித்து, பொடியாக நறுக்கிய வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து, வதக்கவும். மஞ்சள் தூள், மிளகாய்த் தூள் சேர்த்து, சோயா உருண்டைகளைப் போட்டு வதக்கவும். உப்பு சேர்த்துக் கிளறி, சிறிது தண்ணீர் விட்டு, கொதிக்கவிடவும். சோயா வெந்ததும், அரைத்த பாலக் விழுது சேர்த்துக் கிளறி, ஒரு கொதிவந்ததும், பால் சேர்த்துக் கிளறி இறக்கவும். பாலக், சோயா கிரேவி ரெடி. சப்பாத்தி, நான், ரொட்டி, தோசையுடன் சாப்பிட ஏற்றது.
பலன்கள்: அசைவ உணவில் இருக்கும் முதல் தர புரதச்சத்தும் குறைவான மாவுச்சத்தும், சோயாவில் இருக்கின்றன. உடல் வளர்ச்சிக்கு நல்லது. பாலக் கீரையில் கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ், நார்ச்சத்து உள்ளன. பீட்டா கரோட்டின், வைட்டமின் சி ஓரளவு இருப்பதால், கண்களுக்கு நல்லது. இதில், ஃபோலிக் அமிலம், இரும்புச்சத்து அதிகம் இருப்பதால், கர்ப்பிணிகளுக்கு மிகவும் நல்லது. தாய்ப்பால் அதிகம் சுரக்கும்.