எண்ணெய் – 2 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
பட்டை – சிறிய துண்டு
பிரியாணி இலை – 1
வெங்காயம் – 1
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் – 2
மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
கரம் மசாலா – 2 டீஸ்பூன்
டோஃபு – 200 கிராம்
தண்ணீர் – தேவையான அளவு
பால் – 1/2 கப்
சோள மாவு – 1 டீஸ்பூன்
பசலைக்கீரை/பாலக் – 4 கப்
பூண்டு – 2 பற்கள்
தண்ணீர் – 1/2 கப்
செய்முறை:
* ப.மிளகாய், வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* பசலைக்கீரை/பாலக் பொடியாக நறுக்கி வைக்கவும்.
* டோஃபு துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
* முதலில் ஒரு பாத்திரத்தில் பசலைக்கீரை, பூண்டு, 1 பச்சை மிளகாய், 1/2 கப் தண்ணீர் ஊற்றி, 7 நிமிடங்கள் கொதிக்க விட வேண்டும். பசலைக்கீரை நன்கு வெந்ததும், அதனை இறக்கி மத்து கொண்டு நன்கு கடைந்து கொள்ளலாம் அல்லது மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளலாம்.
* மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம், பட்டை, பிரியாணி இலை சேர்த்து தாளித்து, பின் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கி, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்க வேண்டும்.
* பின்பு அதில் மசாலாப் பொடிகள் அனைத்தையும் சேர்த்து கிளறி, பின் அரைத்து வைத்துள்ள பசலைக்கீரையை சேர்த்து கிளறி, 5 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க விட வேண்டும்.
* பிறகு அதில் தண்ணீர் ஊற்றி கிரேவி போன்று செய்து, பின் அதில் டோஃபுவை சேர்த்து கிளறி, தேவையான அளவு உப்பு போட்டு மிதமான தீயில் வேக வைக்க வேண்டும்.
* பின் பாலில் சோளமாவை சேர்த்து கலந்து, கிரேவியுடன் சேர்த்து பச்சை வாசனை போக நன்கு கொதிக்க வைத்து இறக்கினால், பாலக் டோஃபு ரெடி!!!