பாலக்காடு: புத்தூர் திருப்புராய்க்கல் பகவதி அம்மன் கோவில் திருவிழா, ஏராளமான பக்தர்கள் முன்னிலையில் விமரிசையாக நடந்தது. கேரளா, பாலக்காடு அருகே உள்ளது புத்தூர் திருப்புராய்க்கல் பகவதி அம்மன் கோவில். இங்கு ஆண்டுதோறும் பங்குனி மாதம், கூத்தபிஷேம் தாலப்பொலி திருவிழா நடப்பது வழக்கம்.
நடப்பாண்டு திருவிழா, நேற்று அதிகாலை நடைதிறப்புடன் துவங்கியது. காலை, 7:30 மணிக்கு பந்தீரடி பூஜை, கொட்டிப்பாடி சேவை, 9:00 மணிக்கு யானைகளின் அணிவகுப்புடன் செண்டை மேளம் முழங்க காழ்ச்ச சீவேலி நடைபெற்றது. தொடர்ந்து யானை மேல் அமர்ந்து அம்மன் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மாலை, 5.30 மணிக்கு திருவிழாவின் சிறப்பு அம்சமான, 15 யானைகள் அணிவகுப்புடன் குடைமாற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதை ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு களித்தனர்.