பனாமா பேப்பர்ஸ் ஆவணத்தில் மேலும் 2 லட்சம் விஐபிக்கள். அதிர்ச்சி தகவல்
கடந்த சில நாட்களுக்கு முன்னர் உலகையே அதிர வைத்தது பனாமா பேப்பர்ஸ் ஆவணம். உலகில் உள்ள முக்கிய தலைவர்கள், முன்னாள், இந்நாள் பிரதமர்கள், ஹாலிவுட் நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள், தொழில் அதிபர்கள் என பலர் பனாமா நாட்டில் கணக்கில் வராத பணத்தை பதுக்கி வைத்ததாக ஒரு லிஸ்ட் வெளியானது. இந்த லிஸ்ட் வெளியானதால் பல்வேறு நாட்டு தலைவர்கள் தங்களது பதவியை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.
இந்நிலையில், பனாமா ஆவணங்களில் இடம் பெற்றுள்ள மேலும் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பெயர்கள் தற்போது offshoreleaks.icij.org என்ற இணையதளத்தில் நேற்று நள்ளிரவு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு முன்பு வெளியான லிஸ்ட்டையும் சேர்த்து மொத்தம், ஊழல் மோசடிகளில் ஈடுபட்ட 3 லட்சத்து 68 ஆயிரம் பேரின் பெயர்கள் இந்த இணையதளத்தில் தற்போது காணலாம். இந்த லிஸ்ட்டில் பல இந்திய நிறுவனங்களின் பெயர்களும் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.