பனங்கிழங்கு அல்வா
தேவையானவை: பனங்கிழங்கு – 4, ஜவ்வரிசி விழுது- 2 கப் (ஊறவைத்து, அரைத்துக்கொள்ளவும்), சர்க்கரை – 3 கப், ஏலக்காய்த்தூள் – ஒரு டீஸ்பூன், முந்திரி, பாதாம், உலர்திராட்சை, நெய் – தேவையான அளவு.
செய்முறை: பனங்கிழங்கை வேக வைத்து துண்டுகளாக்கி, மிக்ஸியில் போட்டு இரண்டு சுற்று சுற்றவும். பிறகு, கடாயில் 2 டீஸ்பூன் நெய் ஊற்றி, பனங்கிழங்கு விழுதைச் சேர்த்து வதக்கவும். அதனுடன் ஜவ்வரிசி விழுது சேர்த்துக் கலந்து, சர்க்கரையை சேர்த்துக் கிளறவும். தேவையான நெய் ஊற்றி மேலும் கிளறவும். ஏலக்காய்த்தூள், வறுத்த முந்திரி, பாதாம், உலர்திராட்சை சேர்த்து இறக்கிப் பரிமாறவும்.