தேவையான பொருட்கள்:
பன்னீர் -10 பீஸ்
தக்காளி -5
வெங்காயம் -4(பெரியது )
கிராம்பு -4
பட்டை இழை -1/2
தனியா பொடி -1ஸ்பூன்
சீரகம் பொடி -1/2ஸ்பூன்
மஞ்சள் பொடி -1/2ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது -1/2ஸ்பூன்
மிளகாய் பொடி -1ஸ்பூன்
எண்ணெயெ் -1ஸ்பூன்
வெண்ணெய் -2ஸ்பூன்
ஏலக்காய் -3
கசூரி மேத்தி காய்ந்த இழை -1ஸ்பூன்
உப்பு -தேவையான அளவு
செய்முறை :
பன்னீரை சதுர வடிவங்களாக நறுக்கி கொதிக்கும் தண்ணீரில் 45 நிமிடங்கள் போட்டு வைக்கவும்.
கடாயில் ஆயில் விட்டு வெங்காயத்தை சிவக்க வறுத்து கொள்ளவும்.தக்காளியை கொதிக்கும் தண்ணீரில் போட்டு 15 நிமிடங்களுக்கு பின் தோல் உறித்து கொள்ளவும்.
பிறகு வெங்காயம் , தக்காளியை தனித்தனியாக மிக்ஸ்யில்அரைத்து கொள்ளவும்.
கடாயில் வெண்ணெயை போட்டு உருகிய பின் கிராம்பு ,பட்டை இழை ,ஏலக்காய் இவை அனைத்தையும் போட்டு 1நிமிடம் வதக்கவும் .
பின் இஞ்சி ,பூண்டு விழுதை சேர்த்து அரைத்த வெங்காய விழுதை போட்டு 1நிமிடம் வதக்கிய பிறகு தக்காளி விழுதை போட்டு 2 நிமிடங்கள் வதக்கவும்.
பின் மஞ்சள் பொடி ,தனியா பொடி ,மிளகாய் பொடி ,சீரக பொடி,உப்பு சேர்த்து இவை அனைத்தையும் போட்ட பின் ஒரு சின்ன கடாயில்.ஆயில் விட்டு ஊர வைத்துள்ள பன்னீரை போட்டு 1 நிமிடம் வதக்கி. கொதித்து கொண்டிருக்கும் கிரேவியுடன் சேர்த்து 1 நிமிடம் கொதித்த பின் இறக்கி வைத்து பரிமாறவும் .