பனீர் சாண்ட்விச்

p137a

தேவையானவை: பிரெட்  ஒரு பாக்கெட், கேரட் துருவல், பொடியாக நறுக்கிய குடமிளகாய்   தலா ஒரு சிறிய கப், பனீர் துருவல் – 2 சிறிய கப், பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை  சிறிதளவு, வெண்ணெய் – 4 டீஸ்பூன், உப்பு  தேவையான அளவு, எண்ணெய்  ஒரு டீஸ்பூன்.

செய்முறை: வாணலியில் எண்ணெய் விட்டு கேரட் துருவல், நறுக்கிய குடமிளகாய், உப்பு சேர்த்து வதக்கவும். பிரெட் ஸ்லைஸின் ஓரங்களை ‘கட்’ செய்துவிட்டு, அதில் வெண்ணெய் தடவவும். வதக்கிய காய்கறி கலவையுடன்  பனீர் துருவல், கொத்தமல்லித்தழையை சேர்த்துக் கலக்கவும். அதில் கொஞ்சம் எடுத்து பிரெட் ஸ்லைஸின் மேலே பரவலாக போட்டு, மேலே ஒரு பிரெட் ஸ்லைஸ் வைத்து மூடி, டோஸ்டரில் வைத்து எடுக்கவும்.

குறிப்பு: டோஸ்டர் இல்லாதவர்கள் தவாவிலும் செய்யலாம். இதற்கு, சாஸ் சிறந்த காம்பினேஷன்.


 

Leave a Reply