தேவையான பொருள்கள்:
பனீர் – அரை கிலோ.
புளித்த தயிர் – 3 கப்,
உப்பு – 2 டீஸ்பூன்,
மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்,
கரம் மசாலா தூள் – 2 டீஸ்பூன்,
இஞ்சி, பூண்டு விழுது – 2 டீஸ்பூன்,
தந்தூரி கலர் – 2 டீஸ்பூன்.
செய்முறை:
(பொதுவாக வீட்டில் தயாரிக் கும் பனீர் மிகவும் மிருதுவாக இருக்கும். எனவே அதை வாட்டி குச்சியில் குத்தும் போது உடைவதற்கு வாய்ப்பு இருக்கிறது. ஜாக்கிரதையாகக் கையாளவேண்டும். இப்பனீரை பெரிய பெரிய துண்டுகளாக சதுரமாக வெட்டிக்கொண்டு நடுவில்ஓட்டை போடவும்.)
தயிரில் எல்லா பொருள்களையு ம் கலக்கவும். பனீர் துண்டுகளை தயிரில் சுமார் 2 மணி நேரம் ஊற வைக்கவும். வேலைக்குச் செல்லும் பெண்கள் ஊறவைத்த பனீரை ஃப்ரிட்ஜில் வைத்து ஒருநாள், இரண்டு நாள் கழித்துக்கூட பரிமாறலாம். கெட்டுப்போகாது. பனீரை சூடான தோசைக் கல்லின் மேல் வைத்து சிறிதளவு எண்ணெய் ஊற்றி, பொன்னிறமாக ரோஸ்ட் செய்யவும்.
அல்லது சிறிதளவு எண்ணெயில் முழுவதும் பொரிக்காமல், பாதி பொரித்து பின் ஓவனில் கிரில்லில் வைக்கலாம். அல்லது முழுவதுமே ஓவனில் மைக்ரோவேவிலோ செய்யலாம். குமட்டி அடுப்பு இருப்பவர்களுக்கு இவை எதுவுமே தேவையில்லை. ஒரு கபாப் குச்சியில் எல்லா பனீரையும் வரிசையாகக் குத்தி நெருப்பில் வாட்டலாம்.
பரிமாறும் முறை:
கடைகளில் இந்த கபாப் குச்சிகள் விற்கும். இதில் பனீர் டிக்கா ஒன்று, தக்காளி துண்டு ஒன்று, குடமிளகாய் துண்டு ஒன்று என்று மாறி மாறி குத்தி, தக்காளி சாஸு டன் பரிமாறவும்.