தேவையான பொருட்கள்:
பன்னீர் துண்டுகள் – 15
எலுமிச்சை சாறு – 2 ஸ்பூன்
மஞ்சள்தூள் – கால் ஸ்பூன்
சீரகத்தூள் – கால் ஸ்பூன்
கரம் மசாலா – கால் ஸ்பூன்
மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது – 1 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய், ரஸ்க் தூள் – தேவையான அளவு
டிக்கா குச்சி – 1
செய்முறை :
• பன்னீர் துண்டுகளை துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
• ஒரு பாத்திரத்தில் எலுமிச்சை சாறு, மஞ்சள் தூள், சீரகத்தூள், கரம் மசாலா, மிளகாய் தூள், இஞ்சிபூண்டு விழுது, உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்.
• பன்னீர், எண்ணெய், ரஸ்க்தூள் தவிர்த்து மற்ற எல்லா பொருள்களையும் ஒன்றாக கலந்து கொள்ளவும்.
• இந்த கலவையில் பன்னீர் துண்டுகளை அரைமணி நேரம் ஊற வைக்கவும்.
• ஊறிய பன்னீர் துண்டுகளை ரஸ்க் தூளில் புரட்டி டிக்கா குச்சியில் குத்தி வைக்கவும்.
• தோசை கல்லை அடுப்பில் வைத்து அதில் இந்த பன்னீரை போட்டு சுற்றி எண்ணெய் ஊற்றி வேக வைத்து எடுக்கவும்.
• சுவையான பன்னீர் டிக்கா ரெடி.