தேவையான பொருட்கள்:
வாழைக்காய் – 2
பனீர் – 100 கிராம்
பச்சை மிளகாய் – 4
கொத்தமல்லி துண்டுகள் – 1/4 கப்
எலுமிச்சை சாறு – 1 தேக்கரண்டி
உள்ளே வைக்க பூரணம்:
பொடியாக நறுக்கின முந்திரி – 1 மேசைக் கரண்டி
திராட்சை – 1 மேசைக்கரண்டி
துருவின சீஸ் – 1 மேசைக்கரண்டி
மிளகு பொடி – 1/4 தேக்கரண்டி
செய்முறை:
வாழைக்காயை நன்கு வேகவிட்டு, தோலை உரித்து மசிக்க வேண்டும். அத்துடன் பனீர், பச்சை மிளகாய், கொத்தமல்லி, எலுமிச்சை சாறு, உப்பு சேர்த்து மொத்தையாகப் பிசைய வேண்டும். அவற்றை உருண்டைகளாக செய்து கொள்ள வேண்டும்.
பூரணத்திற்குத் தேவையான பொருட்களைக் கலந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு உருண்டைக்குள்ளும், மிகச் சிறிய அளவு பூரணத்தை வைத்து நன்கு மூடவும். வாணலியில் எண்ணை காய வைத்து, கட்லெட்டுகளைப் பொன்னிறமாகப் பொரித்து எடுக்க வேண்டும். தக்காளி சாஸுடன் சூடாகப் பரிமாற வேண்டும்.