நான் தான் அதிமுக பொருளாளர். என் அனுமதி இல்லாமல் ஒரு ரூபாய் கூட வங்கியில் இருந்து எடுக்கக்கூடாது. ஓபிஎஸ்
அதிமுகவின் பொருளாளர் நான் தான். என்னை நீக்க இடைக்கால பொதுச்செயலாளருக்கு உரிமை இல்லை. எனவே இப்பொழுதும் நான் தான் அதிமுகவின் பொருளாளர். என்னுடைய அனுமதி இல்லாமல் அதிமுகவின் வங்கிக்கணக்கில் இருந்து ஒரு ரூபாய் கூட எடுக்கக்கூடாது என்று தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் செக் வைத்துள்ளார். இது சசிகலா உள்பட அதிமுகவினர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
மேலும் ஓபிஎஸ் அவர்கள் அதிமுக கணக்கு வைத்துள்ள மயிலாப்பூரின் இரண்டு வங்கிகளுக்கும் இதுகுறித்து கடிதம் எழுதியுள்ளதாகவும், இரண்டு வங்கிக்கணக்குகளையும் முடக்கி வைக்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளதாகவும் செய்திகள் வந்துள்ளது.
இதுகுறித்து ஓபிஎஸ் தெரிவித்துள்ளதாவது:
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த பின் பொதுச் செயலாளர் பதவிக்கான நபரை முறைப்படி தேர்ந்தெடுக்கப்படவில்லை. இதனால் அதிமுகவின் பொதுச் செயலாளர் பதவி காலியாகவே உள்ளது.
ஜெயலலிதா நியமித்த பொருளாளர் பதவியை யாராலும் நீக்க முடியாது. பொருளாளர் என்ற முறையில் அதிமுகவின் கணக்குகளை முடக்கக் கோரி வங்கிகளுக்கு கடிதம் எழுதியுள்ளேன்.
அதன் படி அதிமுக வங்கி கணக்கில் என் அனுமதியின்றி எந்த ஒரு பணப்பரிவர்த்தனையும் நடைப்பெறக்கூடாது
இவ்வாறு அந்த கடிதத்தில் ஓபிஎஸ் குறிப்பிட்டுள்ளார்