பேப்பர் யூஎஸ்பி

usb_2372608f

எல்லாமே நவீன மயமாகிவரும் நிலையில் சொல்ல வேண்டிய விஷயங்களையும் ஸ்மார்டாக சொல்வதற்கு கண்டுபிடிக்க மாட்டார்களா என்ன.. குறிப்பாக தனிப்பட்ட விஷயங்களை குறிப்பிட்ட நபருக்கு மட்டும் சேர்க்க வேண்டுமெனில் இது போன்ற ஸ்மார்ட்டான ஐடியாக்கள் தேவையாகத்தான் இருக்கிறது.

ஏற்கனவே பார்கோட் முறை, கியூ ஆர் கோட் முறையில் தகவல்களை ஸ்மார்ட்டாக பரிமாறப்படுகிறதுதான். தற்போது அதனினும் முன்னேறிய வடிவமாக பேப்பர் யூஎஸ்பியை கொண்டு வர உள்ளது இன்டெலிபேப்பர் என்கிற அமெரிக்க நிறுவனம்.

கிட்டத்தட்ட பேப்பர் மெமெரி கார்ட் என்று சொல்லலாம். ஆனால் இதை ஒருமுறை மட்டும்தான் பயன்படுத்த முடியும்.

சொல்ல வேண்டிய விஷயத்தை இந்த பேப்பர் யூஎஸ்பியில் அப்லோடு செய்துவிட வேண்டும். விசிட்டிங் கார்டு, வாழ்த்து அட்டை, கடிதம் என நாம் பேப்பர் பயன்படுத்தும் பல வழிகளிலும் இதை இணைத்துக் கொள்ளலாம்.

பிளாப்பி டிஸ்க், சிடி, டிவிடி, பென் டிரைவ், மெமரிகார்ட் வரிசையில் இந்த பேப்பர் யூஎஸ்பி இடம் பிடிக்க உள்ளது. இந்த பேப்பர் யூஎஸ்பி சுற்றுச்சூழலுக்கும் பெரிய பாதிப்பு ஏற்படுத்தாது என்கிறது இன்டெலிபேப்பர் நிறுவனம்.

Leave a Reply