பபுவா நியூகினியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம். சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது.

earthquakeகடந்த மாதம் 25ஆம் தேதி நேபாளத்தில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் சுமார் 8000க்கும் அதிகமானோர் பலியாக சோகமே இன்னும் தீராத நிலையில் பபுவா நியூகினியாவில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக திடுக்கிடும் செய்தி வெளியாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தை அடுத்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

பபுவா நியூகினியாவில் இன்று காலை 7.4 ரிக்டர் அளவுகொண்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன. இது மிகவும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் என்பதால் 300 கிலோ மீட்டர் தூரத்தில் சுனாமி அலைகள் தாக்க வாய்ப்பு இருப்பதாக அந்நாட்டு விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பபுவா நியூகினியாவின் ராபவுல் டவுனிற்கு தெற்கே, சுமார் 154 கிலோ மீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் கூறியுள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்ட பப்புவா நியூக்கினியாவியை சுற்றிலும் 300 கிலோ மீட்டருக்குள் சுனாமி ஏற்பட வாய்ப்பிருப்பதாக பசுபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்து உள்ளது.

மேலும், நகரில் நிலநடுக்கம் கடுமையாக உணரப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆனாலும், நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேதம் குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply