1.இயற்கை வெளியில் ஒரு விரிப்பில் முதலில் இடதுகாலை மடக்கி அதன்மேல் வலதுகாலை வைத்து சித்தாசனம் போட்டுக்கொள்ளவும்.
2.கைகளை வானத்தை பார்த்தவாறு திறந்து வைத்துக்கொள்ளவும்.
3.கண்களை மெதுவாக தாழ்த்தி மூக்குநுனியை பார்த்தவாறு வைத்துக்கொள்ளவும்.அல்லது மூக்குநுனியில் கவனத்தை வைத்து கண்களை மூடிக்கொள்ளலாம்
4.மூச்சை நன்றாக இழுத்து மெதுவாக வெளியே விடவும்.
5.இப்பொழுது உங்களை சுற்றி இருக்கின்ற பசுமையான செடி, கொடிகளை மனக்கண் முன்னால் கொண்டுவரவும். மரத்தின் வெளிமூச்சு மனிதர்களுக்கு உள்மூச்சு. மனிதர்களின் வெளிமூச்சு மரங்களின் உள்மூச்சு இந்த உண்மையை மனதிற்குள் ஆழமாக நினைத்துப் பாருங்கள். அடுத்து நீங்கள் அமர்ந்திருக்கும் பூமியை மனதிற்கு கொண்டுவாருங்கள். பூமிக்கும் உங்களுக்கும் உள்ள தொடர்பை மனதில் நினையுங்கள். இப்ப உங்களை சுற்றி இருக்கின்ற காற்றை உணருங்கள்.அடுத்து உங்களைச் சுற்றி வெப்பத்தை உணருங்கள். அதற்கு காரணமான கதிரவனை நினைத்துப் பாருங்கள்.இப்ப உள்ளே இருக்கின்ற நீரை உணருங்கள்.அடுத்து உங்களைச் சுற்றி, உங்கள் தலைக்கு மேலாக பரந்திருக்கின்ற ஆகாயத்தை கற்பனை செய்துக் கொள்ளுங்கள்.!
6.நீங்கள் இப்ப உங்களைச் சுற்றி பச்சைப் பசுமையான மரங்கள், வெளிர் மஞ்சள் பூமி,வெள்ளை வண்ணக் காற்று, நிறமில்லா நீர்,சிகப்பு நிற கதிரவன்,நீல வண்ண ஆகாயம்.இப்படி பிரபஞ்ச ஆற்றலின் அனைத்து அம்சங்களையும் மனதில் நிலை நிறுத்துங்கள்.
7.இப்ப மெதுவாக உங்கள் உச்சந்தலையை உணர்ப்பூர்வமாக நினையுங்கள், அடுத்து மெதுவாக உங்கள் புருவ மத்தியில் கவனத்தை குவியுங்கள் பிறகு மெதுவாக கண்களை நினையுங்கள். இப்ப இதற்கு முன்னால் நீங்கள் உணர்ந்த இயற்கையின் ஆற்றல் உங்கள் தலைவழியாக உங்கள் தலையில் உள்ள ஒவ்வொரு பகுதியிலும் நிறைவதை உணருங்கள், அடுத்து மெதுவாக கண்கள், தொண்டை, இதயம், நரம்பு மண்டலம் என்று உடலின் ஒவ்வெரு பகுதியிலும் பிரபஞ்ச ஆற்றல்கள் அதற்கான வண்ணத்தோடு பெருகி வருவதை உணருங்கள். அதோடு உணவுப்பாதை ,நுரையீரல், குடல், வயிறு சிறுநீரகம், கல்லீரல் , ஆசனவாய், கால்மூட்டு,குதிகால், கால்கட்டை விரல் என்று எல்லாப்பகுதியிலும் இயற்கை ஆற்றல் நிறைந்திருப்பதை முழுமையாக உணருங்கள் அதேபோல் உங்கள் உடலில் உள்ள சோர்வு, கலக்கம், வியாதி, துன்பம் அனைத்தும் உங்களை விட்டுச் சென்றுவிட்டதை உணருங்கள்.
8.இதே நிலையில் 7 முதல் 12 நிமிடங்கள் வரை அமர்ந்திருங்கள்.
9.பிறகு நன்றாக ஆழமாக ஒருமுறை மூச்சை இழுத்து மெதுவாக வெளியே விடுங்கள், கைகளை உயர்த்தி மூடி இருக்கின்ற கண்களின் மேல் வைத்து கைகளை கீழிறக்கிவிட்டு கண்ணைத் திறந்து பூமியை பாருங்கள், மரத்தைப் பாருங்கள், ஆகாயத்தைபாருங்கள்.! இதுவே பிரபஞ்சா பிராணாயாமம்.!
பலன்கள்
1.மன அழுத்தம் குறையும்.
2.நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
3.உடலில் உள்ள இயற்கை காந்த சக்தியின் ஆற்றல் பெருகும்.
உடல், மன நோய்கள் அனைத்தும் குணமாகும்.
4.நாளமில்லா சுரப்பிகளின் இயக்கம் சீராகும்.
5.இயற்கையின் மீது ஆழ்ந்த நம்பிக்கையும், பிடிப்பும் உருவாகும்.!
இப்படி எண்ணற்ற பயன்களையுடைய மகா தியானம் தான் பிரபஞ்சா தியானம்.! இயற்கையோடு இயைந்து வாழும் மக்களுக்கு இந்த தியானம் நொடியில் கைகூடி வரும்.!அனைவரும் இதன் பயனை கண்டுணர்ந்து உங்கள் உடல், மன ஆற்றலை மேம்படுத்தி என்றும் நலமாகவும், வளமாகவும் வாழ்வாங்கு வாழ நல்வாழ்த்துகள்.!
நலம் பெருகட்டும்