இங்கிலாந்தில் உள்ள மேற்கு யோக்சயர் என்ற பகுதியை சேர்ந்த கெல்லி–டேவிட் டெய்லர் என்ற தம்பதியின் ஐந்து வயது மகனுக்கு அவர்கள் வசிக்கும் பகுதியில் உள்ள பள்ளிகளில் இடம் கிடைக்காததால் தினமும் 12 பேருந்துகள் ஏறி பள்ளிக்கு சென்று வருகிறார்.
இந்த சிறுவனின் வீடு அருகே உள்ள பள்ளிகளில் அட்மிஷன்கள் முடிந்துவிட்டதால் மிகவும் தூரத்தில் உள்ள பள்ளியில் அவனது பெற்றோர்கள் சேர்த்துள்ளனர். இந்த பள்ளிக்கு இவர்கள் வசிக்கும் பகுதியில் இருந்து நேராக செல்ல பேருந்து வசதி இல்லாததால் தினமும் 12 பஸ் ஏறி அந்த பள்ளிக்கு சென்று வருகிறான். இதனால் அவன் மிகவும் சிரமப்படுவதாக பெற்றோர்கள் கூறுகின்றனர். எனவே தங்கள் வீட்டருகே உள்ள பள்ளியில் அவனுக்கு இடம் தர வேண்டும் என்று மீண்டும் விண்ணப்பித்துள்ளனர். இந்த சிறுவனின் 3 வயது சகோதரருக்கு அருகில் உள்ள பள்ளியில் இடம் கிடைத்துவிட்டதால் இவர்களுடைய பெற்றோர்களால் தற்போது வீடு மாறும் முடிவை கைவிட்டனர்.
சகோதர் போல தனக்கும் அருகில் உள்ள பள்ளியில் இடம் கிடைக்கும் என்று நம்புவதாக கூறப்படுகிறது. இந்த சிறுவனுக்கு அருகில் உள்ள பள்ளிகளில் இடம் கிடைக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.