பாலியல் சம்பவங்களுக்கு பெண் குழந்தைகளின் பெற்றோர்கள் தான் காரணம்:
நாட்டில் நடைபெறும் அதிகப்படியான பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு அவர்களின் பெற்றோர்களே முக்கிய காரணம் என உ.பி.யை சேர்ந்த பா.ஜ.க. எம்.எல்.ஏ. சுரேந்தர் சிங் என்பவர் கூறியிருப்பது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
கடந்த நான்கு ஆண்டுகளாக பாஜகவின் சர்ச்சரிக்குரிய கருத்துக்களை அவ்வப்போது தெரிவித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் உத்தரப்பிரதேச மாநிலம் பாலியா மாவட்டத்தில், பா.ஜ.க. எம்.எல்.ஏ. சுரேந்திர் சிங் நேற்று செய்தியாளர்களிடம் கூறியபோது:
நாட்டில் பலாத்கார சம்பவங்கள் அதிகரித்துவிட்டதற்குப் பெண் குழந்தைகளின் பெற்றோர்கள்தான் பொறுப்பேற்க வேண்டும். பெண் குழந்தைகளை சுதந்திரமாக நடமாடவிடுவதால்தான் இதுபோன்ற சம்பவங்கள் எல்லாம் நடக்கின்றன. பெற்றோர்கள் தங்களின் பெண் குழந்தைகளை முறையாகப் பார்த்துக்கொள்ளாமல், கண்காணிக்காமல் விட்டுவிடுவதால்தான் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கின்றன. ஒரு சிறுமிக்கோ அல்லது சிறுவனுக்கோ 15 வயது வந்துவிட்டால், அவர்களின் நடவடிக்கைகளைத் தீவிரமாக கண்காணிக்க வேண்டும். இது பெற்றோரின் கடமையாகும். ஆனால், அப்படி செய்யாமல், அவர்களை சுதந்திரமாக விட்டுவிடுகிறார்கள். இதனால் தான் பலாத்கார சம்பவங்கள் நடக்கின்றன. குழந்தைகளிடம் செல்போன்களைப் பயன்படுத்த தரக்கூடாது.
நான் மனிதர்களின் மனநிலையை ஒப்பிட்டுப் பேசுகிறேன். 3 குழந்தைகளுக்கு தாயான ஒரு பெண்ணை யாரும் பலாத்காரம் செய்ய முடியாது. இதுபோன்ற குற்றச்சாட்டு தான் அவர் மீது (உன்னாவ் தொகுதி பா.ஜ.க. எம்.எல்.ஏ.) மீது சுமத்தப்பட்டுள்ளது.
சுரேந்திர் சிங் கூறிய இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.