பெற்றோர் எதிர்ப்பால் மத்திய அரசு அதிர்ச்சி
இந்தியாவில் வரும் ஆகஸ்ட் மாதம் பள்ளியைத் திறக்கலாம் என மத்திய அரசு நேற்று அறிவித்துள்ள நிலையில் இந்த அறிவிப்புக்கு பெற்றோர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு ஏற்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் தினமும் 10 ஆயிரம் பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்றும் உலகிலேயே கொரோனா பாதிப்பில் இந்தியா ஆறாவது இடத்தில் இருக்கின்றது என்றும் பெற்றோர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்
இந்தியாவில் மொத்தம் 33 கோடி மாணவர்கள் இருக்கும் நிலையில் அவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு கொரோனா பாதிப்பு ஜீரோவாக மாறும் வரை பள்ளிகளை திறக்க கூடாது என பெற்றோர்கள் மத்தியில் இருந்து கருத்துக்கள் வெளியாகி உள்ளன
அதையும் மீறி பள்ளிகளை திறந்தால் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் என்றும் பெற்றோர்கள் தெரிவித்து வருவதால் மத்திய அரசு அதிர்ச்சி அடைந்துள்ளது
கொரோனா பாதிப்பு வரும் செப்டம்பரில் உச்சத்தில் இருக்கும் என்று ஏற்கனவே விஞ்ஞானியின் கூறியதாக தகவல்கள் வெளிவந்த நிலையில் ஆகஸ்ட் மாதம் பள்ளிகளை திறப்பது எந்த வகையில் சாத்தியம் என்றும் பெற்றோர்கள் மத்தியில் இருந்து கேள்விகள் எழுந்துள்ளது. இதனை அடுத்து மத்திய அரசு என்ன செய்யப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்