பெங்களூரில் விதிமுறைகளை மீறி இருசக்கர வாகனங்கள் ஓட்டுவோர்களின் எண்ணிக்கை மிக அதிகமாகி வருவதால் இதுகுறித்து கடும் நடவடிக்கை எடுக்க கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. இந்த விபத்துக்கள் பெரும்பாலும் 18வயதுக்கு உட்பட்டவர்களால்தான் ஏற்படுகிறது என்று எழுந்துள்ள குற்றச்சாட்டுக்களை அடுத்து கர்நாடக போலீஸார் சில அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.
18 வயதுக்கு உட்பட்டவர்கள் மோட்டார் சைக்கிள்கள் ஓட்டியது கண்டுபிடிக்கப்பட்டால், அவர்களுடைய பெற்றோர் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என்றும், பெற்றோர்களின் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படும் நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றும் போக்குவரத்து போலீஸார் சிபாரிசு செய்துள்ளனர்.
இந்த சிபாரிசு அரசால் ஏற்றுக்கொள்ளபட்டால், பெற்றோர்கள் மீது வழக்குகள் பாயும் என்பது உறுதி. 18வயதுக்கு உட்பட்டவர்கள் இருசக்கர வாகனங்களில் செல்வதை பெற்றோர்களால் மட்டுமே முழுமையாக தடுக்க முடியும் என்பதற்காகவே இந்த நடவடிக்கை என போக்குவரத்து போலீஸார் கூறியுள்ளனர்.