கனியாமூர் பள்ளியை திறக்க கோரிக்கை: 100க்கும் மேற்பட்டோர் குவிந்ததால் பரபரப்பு
கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பள்ளியை திறக்க கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெற்றோர் மனு கொடுத்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 100க்கும் மேற்பட்டோர் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க வந்த பெற்றோர்களுடன், டிஎஸ்பி, ஆட்சியரின் பொது மேலாளர் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினார்.
போலீஸ் கட்டுப்பாட்டில் உள்ள பள்ளி ஓரிரு நாட்களில் நிர்வாகம் வசம் ஒப்படைக்கப்படும் என்றும், பள்ளியை விரைவில் திறக்க நடவடிக்கை எடுப்பதாகவும் பெற்றோரிடம் அதிகாரிகள் உறுதி அளித்தனர்.