புழல் சிறையில் எஸ்.ஆர்.எம் பச்சமுத்து. முதல் வகுப்பில் அடைக்க நீதிபதி உத்தரவு
பண மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள எஸ்.ஆர்.எம்., குழும தலைவர் பாரிவேந்தர் என்ற பச்சமுத்துவை காவல்துறையினர் சைதாபேட்டை 11வது குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். நீதிமன்றத்தில் ஆஜரான பாரிவேந்தரின் வழக்கறிஞர் அன்பழகன், ‘பாரிவேந்தர் பணமோசடியில் ஈடுபட்டதற்கான எந்தவித முகாந்திரமும் இல்லை என்றும் எனவே அவரை கைது செய்தது தவறு என்றும் வாதாடியுள்ளார்.
இந்நிலையில் பார்வேந்தர் சார்பில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரணை செய்த நீதிபதி வரும் 29-ம் தேதி பச்சமுத்துவின் ஜாமீன் மனு மீதான விசாரணை நடைபெறும் என்றும் பச்சமுத்துவை செப்டம்பர் 9-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்கவும் உத்தரவிட்டார்.
நீதிபதியின் இந்த உத்தரவை தொடர்ந்து பச்சமுத்து புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும் நீதிமன்றத்தின் உத்தரவின்படி பச்சமுத்துவிற்கு சிறையில் முதல் வகுப்பு ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.