இங்கிலாந்து பாராளுமன்றம் அருகே துப்பாக்கிசூடு.
இங்கிலாந்து நாட்டின் பாராளுமன்றத்திற்கு வெளியே நேற்றிரவு துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்துள்ளது. இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் ஈடுபட்ட ஒரு பெண் சுட்டுக் கொல்லப்பட்டதாக இங்கிலாந்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன., மேலும் 20க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்துள்ளனர்.
இந்தச் சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய இங்கிலாந்து காவல்துறை உயரதிகாரி ஒருவர் இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தை ஒரு தீவிரவாத நடவடிக்கையாகத்தான் தற்போது அணுகுகிறோம்.’ என்று கூறியுள்ளார். மேலும் பாராளுமன்றத்தின் உள்ளே சுமார் 400 எம்.பிக்கள் உள்ளதாகவும், அனைவரும் பத்திரமாக உள்ளதாகவும், குறிப்பாக. பிரதமர் தெரேசா மே பாதுகாப்பாக உள்ளதாகவும் அந்த அதிகாரி கூறியுள்ளார்.
துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்ததைதை அடுத்து பாராளுமன்றத்தின் அவை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டதாக இங்கிலாந்து நாடாளுமன்றத் துணை சபாநாயகர் அறிவித்துள்ளார்.