மெரிக்காவில் உள்ளது போன்ற ஜனாதிபதி ஆட்சிதான் இந்தியாவுக்கு ஏற்றது. சசிதரூர்
இந்தியாவுக்கு இங்கிலாந்து நாட்டை அடிப்படையாக கொண்ட நாடாளுமன்ற ஆட்சி ஒத்து வராது என்றும், அமெரிக்காவில் உள்ளதுபோல் அதிபர் ஆட்சிதான் சரியாக இருக்கும் என்றும் முன்னாள் மத்திய அமைச்சர் சசிதரூர் விழா ஒன்றில் கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, நேற்று ஜெய்ப்பூர் நகரில் நடைபெற்றஇலக்கிய விழா ஒன்றில் அவர் பேசியபோது ”இந்தியாவுக்கு பொருத்தமற்ற நாடாளுமன்ற அமைப்பு முறையை நாம் பின்பற்றுவதற்கு காரணம், இந்தியாவை ஆட்சி செய்த இங்கிலாந்தை முன்னுதாரணமாகக் கொண்டு, அவர்களை பின்பற்றுவதுதான். இந்தியாவுக்கு ஏற்றது அமெரிக்காவில் உள்ளது போன்ற ஜனாதிபதி ஆட்சி முறைதான் என 1930-ல் அமைக்கப்பட்ட சைமன் கமிஷன் கூறியது. ஆனால், இதற்கு நமது தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
நாம் இப்போது பின்பற்றும் நாடாளுமன்ற ஆட்சி முறையானது, ஒரு சிறிய நாடால் அளிக்கப்பட்டது. இங்கிலாந்தில் வெறும் 60 மில்லியன் மக்கள் தொகையே உள்ளது. இங்குள்ள ஒவ்வொரு எம்.பி.யும் வெறும் ஒரு லட்ச மக்களின் பிரதிநிதிகளாகத்தான் இருக்கிறார்கள்.
ஆனால், இந்தியாவில் ஒவ்வொரு எம்.பி.யும் சுமார் 20 லட்சம் மக்களின் பிரதிநிதியாக உள்ளனர். அவர்கள் தங்கள் தொகுதியில் உள்ள ஒவ்வொரு மக்களையும் சந்திப்பது என்பது சாத்தியம் இல்லாதது. இந்தியா போன்ற பல தேசிய இனங்கள், கலாச்சாரம், மொழி, நிறம், சாதி, நம்பிக்கை, உணவு, தண்டனை, ஆடை என பன்முகத்தன்மை கொண்ட ஒரு நாட்டில் கூட்டணி ஆட்சி செயல்படுவது கடும் சவால் நிறைந்தது” இவ்வாறு சசிதரூர் பேசியுள்ளார்.