பாராளுமன்ற தேர்தல் அறிவிப்பு: தமிழகத்தில் ஏப்ரல் 24ல் தேர்தல்

SAMPATHபாராளுமன்ற தேர்தல் குறித்த அறிவிப்பை இன்று அதிகாரபூர்வமாக தலைமை தேர்தல் ஆணையர் வி.எஸ்.சம்பத் அறிவித்துள்ளார். அதன்படி தேர்தல் இந்தியா முழுவதும் 9 கட்டங்களாக நடைபெறுகிறது.

ஏப்ரல் 6 முதல் கட்ட தேர்தல்: அஸ்ஸாம், மற்றும் திரிபுரா

ஏப்ரல் 9 இரண்டாம் கட்ட தேர்தல்: அருணாச்சல் பிரதேசம், மணிப்பூர், மிசோரம், மேகாலயா, நாகலாந்து

ஏப்ரல் 10 மூன்றாவது கட்ட தேர்தல்: அந்தமான் நிகோபார், பீகார், சண்டிகார், சத்தீஸ்கர், அரியானா, ஜம்மு காஷ்மீர், ஜார்க்கண்ட், லட்சத்தீவுகள், கேரளா, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, டெல்லி, உத்தரப்பிரதேசம், ஒடிசா ஆகிய 14 மாநிலங்களில் உள்ள 92 தொகுதிகளில் நடைபெறும்

ஏப்ரல் 12 நான்காவது கட்ட தேர்தல்: அஸ்ஸாம், சிக்கிம், திரிபுரா ஆகிய மாநிலங்களின் 5 தொகுதிகள்

ஏப்ரல் 15 ஐந்தாவது கட்ட தேர்தல்: பீகார், சத்தீஸ்கர், கோவா, ஜம்மு காஷ்மீர், ஜார்க்கண்ட், கர்நாடகா, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, மணிப்பூர், ஒடிசா, உத்தரபிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம் ஆகிய 13 மாநிலங்களில் உள்ள 122 தொகுதிகளில் தேர்தல் நடைபெறும்.

ஏப்ரல் 24 ஆறாவது கட்டதேர்தல்: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி. மேலும் இதே தேதியில் ஆலந்தூர் சட்டமன்ற தேர்தலும் நடைபெறும்

ஏப்ரல் 30 ஏழாவது கட்ட தேர்தல்: ஜம்மு, காஷ்மிர், தாத்ரா, நாகர் ஹவேலி, பீகார்,பஞ்சாப், உத்தரபிரதேசம் மற்றும் பீகார்.

மே 7 எட்டாவது கட்ட தேர்தல்: ஹிமாச்சல பிரதேசம், ஜம்மு காஷ்மிர், உத்தரகாண்ட், மேற்குவங்கம், உத்தரபிரதேசம்.

மே 12 ஒன்பதாவது கட்ட தேர்தல்: மேற்கு வங்கம், உத்தரபிரதேசம்,

வாக்கு எண்ணிக்கை மே 16 ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெறும் என்றும், அன்று இரவே முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் சம்பத் தெரிவித்தார்.

பொதுத் தேர்தலில் 81.4 கோடி பேர் வாக்களிப்பார்கள் என்றும், கடந்த தேர்தலைவிட புதிதாக 12 கோடி பேர் வாக்களிக்க உள்ளனர் என்றும் கூறினார்.

Leave a Reply