சசிகலாவுக்கு 15 நாட்கள் பரோல்: அனுமதி வழங்கியது பெங்களூர் சிறை நிர்வாகம்
சொத்து குவிப்பு வழக்கில் ஆண்டுகள் தண்டனை பெற்ற ஜெயலலிதாவின் தோழி சசிகலா பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் தண்டனை அனுபவித்து வரும் நிலையில் அவரது கணவர் நடராஜன் இன்று அதிகாலை மரணம் அடைந்ததை அடுத்து பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறை தலைமை சூப்பிரண்டு சோமசேகரிடம் சசிகலாவுக்கு 15 நாட்கள் பரோல் கேட்டு மனு கொடுக்கப்பட்டது. இந்த மனுவுடன் நடராஜனின் இறப்பு தொடர்பாக சென்னை குளோபல் மருத்துவமனை வழங்கிய சான்றிதழ்களும் இணைத்து வழங்கப்பட்டன.
இந்த நிலையில் சசிகலாவுக்கு பரோல் கொடுப்பது குறித்து தலைமை சூப்பிரண்டு, சிறைத்துறை டி.ஜி.பி.யுடன் கலந்து ஆலோசித்தார். பின்னர் 10 நாட்கள் பரோல் வழங்க அனுமதி வழங்கப்பட்டது ஆனால் 10 நாட்கள் ‘பரோல்’ போதாது, 15 நாட்கள் பரோல் வழங்க வேண்டும் என்று சசிகலா தரப்பு கோரிக்கை விடுத்ததை அடுத்து சசிகலாவுக்கு 15 நாட்கள் ‘பரோல்’ வழங்க டி.ஜி.பி. உத்தரவிட்டார். இதனையடுத்து இன்று இரவு சசிகலா தஞ்சை வந்து சேருவார்கள் என்று தெரிகிறது.