கட்சி விவகாரங்களை ஊடகங்களில் தெரிவிக்க வேண்டாம். வெங்கையா நாயுடு வேண்டுகோள்

கட்சி விவகாரங்களை ஊடகங்களில் தெரிவிக்க வேண்டாம். வெங்கையா நாயுடு வேண்டுகோள்
vengaiya-naidu
சமீபத்தில் நடைபெற்று முடிந்த பீகார் மாநில சட்டமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி படுதோல்வி ஆனதை அடுத்து கட்சியின் மூத்த தலைவர்களான அத்வானி, சத்ருஹன் சின்ஹா உள்பட பலர் கட்சியின் தலைவர் அமீத்ஷா மற்றும் பிரதமர் மோடி ஆகியோர்களுக்கு எதிராக வெளிப்படையான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

பீகார் தோல்விக்கு மோடி மற்றும் அமீத்ஷா பொறுப்பேற்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி வரும் நிலையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் வெங்கையா நாயுடு, “பாஜக மூத்த தலைவர்கள் தங்களது கருத்துகளை கட்சிக் கூட்டங்களில் மட்டுமே தெரிவிக்க வேண்டும். அதனை விடுத்து பொது இடங்களிலும், ஊடகங்களிலும் பேசுவது ஏற்புடையது அல்ல. இத்தகைய பேச்சுகளால் கட்சியின் பெயருக்கும் தலைமைக்கும் களங்கம் ஏற்படுவதை உணர வேண்டும்.

நேற்று பெங்களூர் வந்த அமைச்சர் வெங்கயாநாயுடு செய்தியாளர்களிடம் பேசியபோது, “பிகார் தேர்தல் தோல்வி என்பது பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு ஏற்பட்ட தோல்வி அல்ல. இது மாநில அளவில் அதன் பிரச்சினைகளை கருத்தில் கொண்டு மக்கள் இத்தகைய முடிவை எடுத்துள்ளார்கள். இதற்கு எதிர்க்கட்சியினரும் பாஜக‌ மூத்த தலைவர்களும், ஊடகங்களும் தவறான கற்பிதங்களை கற்பிப்பது சரியல்ல. பாஜக மூத்த தலைவர்கள் தங்களது கருத்துகளை கட்சிக் கூட்டங்களில் மட்டுமே தெரிவிக்க வேண்டும். அதனை விடுத்து பொது இடங்களிலும், ஊடகங்களிலும் பேசுவது ஏற்புடையது அல்ல. இத்தகைய பேச்சுகளால் கட்சியின் பெயருக்கும் தலைமைக்கும் களங்கம் ஏற்படுவதை உணர வேண்டும்.

கடந்த ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் மோடி தலைமையில் பாஜக போட்டியிட்டதாலே, மாபெரும் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. மோடியின் செல்வாக்கின் காரணமாகவே அசாம், பஞ்சாப், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பாஜக‌ ஆட்சியைப் பிடித்தது. இந்நிலையில் பிகார் தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்கு குறிப்பிட்ட ஒருவரையோ அல்லது குழுவையோ பொறுப்பேற்க வேண்டும் என கூறுவது ஏற்புடையது அல்ல. இந்த தேர்தல் தோல்வி தேசிய அரசியலில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.எனவே பிகார் தோல்வி குறித்து மூத்த தலைவர்கள் சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவிப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும்’ என்று கூறியுள்ளார்.

English Summary: Party veterans shouldn’t have gone public: Venkaiah Naidu on dissent in BJP over Bihar defeat

Leave a Reply