அஜீத் ஜோடியாக நடித்த பிரபல நடிகை உடல்தானம்.

parvathiபில்லா 2 படத்தில் அஜீத்துக்கு ஜோடியாக நடித்த நடிகை பார்வதி ஓமனக்குட்டன் உடல் உறுப்புகளை தானம் செய்துள்ளார்.

கடந்த 2008ஆம் ஆண்டு இந்திய அழகி பட்டம் பெற்ற பார்வதி ஓமனக்குட்டன், அஜீத்துடன் இணைந்து நடித்த பில்லா 2 படம் எதிர்பார்த்த அளவு ஓடாததால், அவருக்கு தமிழில் நடிக்க அடுத்த வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்நிலையில் அவர் ஒருசில மலையாள படங்களில் நடித்து வந்தார்.

நடிப்பு மட்டுமின்றி மாடலிங், பேஷங் ஷோ என்று என்று பிசியாக இருக்கும் பார்வதி அவ்வப்போது சமூக சேவையிலும் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் அவர் தன்னுடைய உடல் உறுப்புகளை தானம் செய்யும் ஒப்பந்த பத்திரத்தில் கையெழுத்திட்டுள்ளார்.

இதுகுறித்து பார்வதி ஓமனக்குட்டன் செய்தியாளர்களிடம் கூறியபோது, ‘உடல் உறுப்புகளை தானம் செய்வதன் மூலம் நாம் இறந்த பிறகும் மற்றவர்களின் மூலம் நமது உடல் உறுப்புகள் உயிருடன் இருக்கும். நான் எனது பிறந்த நாளில் உடல் உறுப்புகளை தானம் செய்யும் முடிவை எடுத்துள்ளேன். எனது இந்த முடிவுக்கு எனது குடும்பத்தினர் எனக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்துள்ளனர். பிறந்த நாள் அன்று மது விருந்து, ஆட்டம் பாட்டம் என்று பொழுதை கழிக்காமல் பயனுள்ள ஒரு காரியத்தை செய்த நிம்மதி அடைந்துள்ளேன்’ என்று அவர் கூறினார்.

Leave a Reply