பாகிஸ்தானில் பிரபல பாடகியாக விளங்கிய குல்னார் சுட்டுக் கொல்லப்பட்டார். அவருக்கு வயது 38.
இந்த கொலை குறித்து பெஷாவர் போலீஸ் அதிகாரி ரசூல்ஹக் இன்று செய்தியாளர்களிடம் கூறியபோது, “அடையாளம் தெரியாத முகமூடி அணிந்த சிலர் சரமாரியாக நடத்திய துப்பாக்கி தாக்குதலில் சிக்கி பாகிஸ்தான் பாடகி குல்மார், பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தீவிர சிகிச்சைப்பிரிவில் அவருக்கு சிகிச்சை கொடுத்தபொதிலும், சிகிச்சைக்கு பலன் இன்றி அவர் பரிதாபமாக இறந்தார்.
மேலும் பாடகி குல்னார் 3 முறை திருமணம் செய்துள்ளார் என்றும், சொந்த விரோதம் காரணமாக இந்த கொலை நடந்ததாக முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாகவும் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.