இது குறித்து நேற்று தென்னக ரெயில்வே வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பின்படி:
சென்னை கடற்கரை – ஐதராபாத் பாசஞ்ஜர் சிறப்பு ரெயில்: சென்னை கடற்கரையில் இருந்து இந்த ரெயில் வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்குப் புறப்பட்டு திருவள்ளூர், அரக்கோணம், ரேணிகுண்டா, குண்டூர், நெல்லூர், ஓங்கோல், தெனாலி, விஜயவாடா, வாரங்கல், காசியாபேட், செகந்தராபாத் வழியாக ஐதராபாத் செல்லும்.
ஜோலார்பேட்டை – திருவனந்தபுரம்: ஜோலார்பேட்டையில் இருந்து இந்த சிறப்பு ரெயில் வெள்ளிக்கிழமை காலை 5 மணிக்குப் புறப்பட்டு சேலம், ஈரோடு, பாலக்காடு, எர்ணாகுளம், கொல்லம் ரயில் நிலையங்கள் வழியாக திருவனந்தபுரம் சென்றடையும்.
சென்னை கடற்கரை – திருநெல்வேலி: சென்னை கடற்கரையில் இருந்து இந்த சிறப்பு ரெயில் வெள்ளிக்கிழமை காலை 11.30 மணிக்குப் புறப்பட்டு பெரம்பூர், திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி, விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கோவில்பட்டி, வாஞ்சி மணியாச்சி வழியாக திருநெல்வேலி சென்றடையும்.
சென்னை கடற்கரை – ராமேஸ்வரம்: சென்னை கடற்கரையில் இருந்து இந்த சிறப்பு ரெயில் வெள்ளிக்கிழமை பகல் 12.30 மணிக்குப் புறப்பட்டு பெரம்பூர், திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், கரூர், திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி, மானாமதுரை வழியாக ராமேஸ்வரம் சென்றடையும்.
சென்னை கடற்கரை – ஹவ்ரா: சென்னை கடற்கரையில் இருந்து இந்த சிறப்பு ரெயில் வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்குப் புறப்பட்டு பெரம்பூர், அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர், விஜயவாடா, ராஜமுந்தரி, துவ்வாடா, விஜயநகரம், புவனேஸ்வரம், காரக்பூர் வழியாக ஹவ்ரா சென்றடையும்.
அரக்கோணம் – மும்பை சிஎஸ்டி: அரக்கோணத்தில் இருந்து வெள்ளிக்கிழமை இந்த சிறப்பு ரெயில் காலை 8.20 மணிக்குப் புறப்பட்டு ரேணிகுண்டா, ராஜம்பேட்டை, கடப்பா, எரகுண்டலா, தாதிபத்ரி, கூட்டி, குண்டக்கல், அதோனி, மந்த்ராலயம் சாலை, ராய்சூர், வாடி, சோலாப்பூர், புனே, கல்யாண் வழியாக மும்பை சிஎஸ்டி சென்றடையும்.