ஓடும் விமானத்தில் ஏற முயன்ற வாலிபர். தீவிரவாதியா என விசாரணை
இதுவரை ஓடும் பஸ் மற்றும் ரயில்களில் மட்டும்தான் பயணிகள் ஏறுவதையும் இறங்குவதையும் நாம் பார்த்துள்ளோம். ஆனால் முதல்முறையாக ஒரு பயணி ஓடும் விமானத்தில் ஏற முயற்சி செய்துள்ளார். இது நடந்தது ஸ்பெயின் நாட்டின் விமான நிலையத்தில் என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்பெயின் நாட்டின் ரெயான் என்ற நிறுவனத்தின் விமானத்தில் செல்ல பொலிவியா நாட்டை சேர்ந்த ஒருவர் டிக்கெட் எடுத்திருந்தார். ஆனால் இவர் சரியான நேரத்திற்கு விமான நிலையத்திற்கு வரவில்லை. இவர் விமான நிலையத்திற்குள் நுழையும்போது விமான பாதை இணைப்பை துண்டித்து விட்டு விமானம் கிளப்புவதற்கு தயாரானது.
விமானம் கிளம்புவதை பார்த்த அந்த பயணி குகைவழி பாதையில் கையில் வைத்திருந்த இரண்டு பைகளுடன் விமானத்தை நோக்கி வேகமாக ஓடினார்.
விமானத்தை நோக்கி ஒருவர் கையில் பையுடன் ஓடி வருவதை பார்த்த பாதுகாப்பு அதிகாரிகள் அவர் தீவிரவாதி என கருதி அவரை மடக்கி பிடித்தனர். பின்னர் நடந்த விசாரணையில் அவர் விமானத்தில் ஏற ஓடி வந்துள்ளார் என்பது தெரிந்தது..
பாதுகாப்பு விதிகளை மீறி விமான ஓடுதளத்தில் செல்வது தண்டனைக்குரிய குற்றம். இதற்காக அவர் ரூ.25 லட்சம் வரை அபராதம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படும் என கூறப்படுகிறது.