வெடிகுண்டு புரளி எதிரொலி: ஓடும் விமானத்தில் இருந்து குதித்த பயணிகள்

வெடிகுண்டு புரளி எதிரொலி: ஓடும் விமானத்தில் இருந்து குதித்த பயணிகள்

ஆஸ்திரேலியாவில் உள்ள நியூ சவுத் வேல்ஸ் என்ற பகுதியில் உள்ள ஒரு விமான நிலயத்தில் நேற்று சிறிய ரக விமானம் ஒன்று சுமார் 40 பயணிகளுடன் தரையிறங்க ரன்வேயை தொட்டது. அந்த சமயத்தில் அந்த விமானத்தின் கழிப்பறைக்கு சென்ற ஒரு பயணி, அங்கு கிடந்த ஒரு மர்ம கடிதத்தை படித்துப் பார்த்து விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக அலறிக்கொண்டே ஓடி வந்தார்.

அவருடைய அலறல் சத்தத்தை கேட்டு கொண்டு வந்த பெட்டி, படுக்கையை கூட எடுக்காமல் உயிரை காக்கும் அவசரத்தில் ரன்வேயில் ஓடிக்கொண்டிருந்த விமானத்தில் இருந்து பயணிகள் குதித்தனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு விமானம் முழுவதும் சோதனை செய்யப்பட்டது. ஆனால் விமானத்தில் எந்த வெடிகுண்டும் இல்லை என்பதால் அந்த கடிதம் புரளிக்காக எழுதப்பட்டது என்பது உறுதியானது. இந்த நிலையில் மேற்கண்ட மிரட்டல் கடிதத்தை எழுதியவர் என்ற சந்தேகத்தின்பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டதாக நியூ சவுத் வேல்ஸ் போலீசார் குறிப்பிட்டுள்ளனர்.

Leave a Reply