பாஸ்தா சாலட்

a4238565-731c-48a1-acda-06e7d2a53197_S_secvpf

தேவையான பொருட்கள் :

தக்காளி – 100 கிராம்
மஞ்சள் குடைமிளகாய் – 100 கிராம்
வெள்ளரிக்காய் – 100 கிராம்
கருப்பு ஆலிவ் – 15 எண்கள்
பிராக்கோலி (Broccoli)- சிறியது
பன்னீர் – சிறிது
ஸ்பிரிங் பாஸ்தா – 100 கிராம் (வேக வைத்தது)
ஆலிவ் எண்ணெய் – 2 ஸ்பூன்
புதினா – சிறிதளவு
எலுமிச்சைச் சாறு – 1 ஸ்பூன்
மிளகுத் தூள், உப்பு – தேவையான அளவு
கொத்துமல்லி – சிறிதளவு

செய்முறை :

* தக்காளி, குடைமிளகாய், கொத்துமல்லி, வெள்ளரிக்காயை பொடியாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் போடவும்.

• ஆலிவ் எண்ணெய், புதினா, எலுமிச்சைச் சாறு, மிளகுத் தூள், உப்பு அனைத்தையும் சேர்த்து அரைத்து சாலட்டில் ஊற்றி நன்றாக  கலந்து கொத்துமல்லி தூவிப் பரிமாறவும்

Leave a Reply