பதான்கோட் தாக்குதலின்போது மீட்புப்பணிக்கு உதவிய மோப்ப நாய்க்கு விருது

பதான்கோட் தாக்குதலின்போது மீட்புப்பணிக்கு உதவிய மோப்ப நாய்க்கு விருது
rocket dog
இந்தியாவையே அதிரவைத்த பதான்கோட் விமானப்படைத்தளத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் 7 ராணுவ வீரர்கள் மரணம் அடைந்த நிலையில் இந்த தாக்குதலில் வெடிக்காத பல வெடிகுண்டுகளை மோப்பசக்தி மூலம் மோப்பம் பிடித்து கண்டுபிடித்த ராக்கெட் என்ற மோப்பநாய்க்கு அமைதிநேர வீரதீர சாகச (காலண்ட்ரி) விருது வழங்கப்பட உள்ளது.

ராக்கெட் கண்டுபிடித்த வெடிகுண்டுகள் செயலிழக்க செய்யப்பட்டதோடு அங்கு பதுங்கியிருந்த ஒரு தீவிரவாதியை கண்டுபிடிக்கவும் இந்த நாய் உதவி செய்துள்ளது. பதான்கோட் மீட்புப்பணியின் நாயகனாக கருதப்படும் ராகெட் என்ற மோப்ப நாய்க்கு அமைதி விருது வழங்குவது இந்த சமயத்தில் பொருத்தமானதாக கருதப்படுகிறது.

பதான்கோட் மீட்புப்பணியின் போது ராகெட் மோப்ப நாய்க்கு வலது காலில் தீக்காயம் ஏற்பட்டதாகவும் ஆனால் தற்போது அந்த காயம் சிகிச்சை செய்யப்பட்டு குணமாக்கப்பட்டதாகவும் அதன் பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.

பொதுவாக இந்த காலண்ட்ரி விருது, பணியின்போது தனித்து புரியும் சாகசங்களுக்காக வழங்கப்படும் ஒரு விருது ஆகும். இந்த விருதை பெற்றவர்களுக்கு 10 வருடப் பணி ஓய்வுக்குப் பிறகு மாதம் ரூ. 20,000 ஓய்வூதியம் கிடைக்கும். தற்போது ராக்கெட்க்கு ரூ. 15,000 முதல் 20,000 ரூபாய் வரை பராமரிப்பு தொகை அளிக்கப்படுகிறது. இதற்கு விருது அளிக்கப்பட்டால் ஓய்வுக்கு பிறகும் ராக்கெட்டுக்கு நல்ல பராமரிப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply