மாரடைப்பு காரணமாக நின்று விட்ட இதயத்தை, ஒரு மணி நேரம் போராடி மீட்டுள்ள சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை டாக்டர்களுக்கு பாராட்டு குவிந்து வருகிறார்.
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க நோயாளி ஒருவர், நெஞ்சுவலி சிகிச்சைக்காக நேற்று இதய அறுவை சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவருக்கு இதய ரத்த நாளத்தில் அடைப்பு இருப்பதாக டாக்டர்கள் கண்டறிந்தனர்.
அவருக்கு உடன1டியாக அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்தனர். நேற்று மாலை அவருக்கு அறுவை சிகிச்சை நடைபெற்று கொண்டிருந்தபோது நோயாளியின் இதயத்துடிப்பு திடீரென நின்றுவிட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர். இருப்பினும் மயக்கவியல் மருத்துவர்கள் மற்றும் இதய அறுவை சிகிச்சை நிபுணர்கள் ஒரு மணி நேரத்திற்குமேல் போராடி நோயாளியின் இதயத்துடிப்பை மீட்டனர்.
அதன்பின்னர் வெற்றிகரமாக பைபாஸ் அறுவை சிகிச்சை முடிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவர்களும், செவிலியர்களும் அளித்த தீவிர சிகிச்சையால் நோயாளி தேறி, இதய நோய் குணமாகி நலமடைந்தார்.
மருத்துவர்களும், செவிலியர்களும் மற்ற பணியாளர்களும் ஒருமித்து தீவிர சிகிச்சை அளித்ததால் வெகு நேரம் இதயத்துடிப்பு இல்லாதிருந்த நோயாளி உயிருடன் மீட்கப்பட்டார். அறுவை சிகிச்சை செய்த டாக்டர்களுக்கு நோயாளியின் உறவினர்கள் தங்களது நன்றியினை தெரிவித்துக்கொண்டனர்.