ஒருவர் எந்த ஊரில் பிறந்தாலும், புனிதத் தலமான காசிக்குச் சென்று கங்கையில் நீராட பாவம் தீரும். ஆனால், கும்பகோணத்தில் பிறந்தவர்களுக்கு மகாமக குளத்தில் நீராடினாலே பாவம் நீங்கி விடும். இதை கும்பகோணே க்ருதம் பாவம் கும்பகோணே விநச்யதி என்ற ஸ்லோகம் குறிப்பிடுகிறது. 20 ஏக்கர் பரப்பு கொண்ட மகாமக குளம் கிழக்கு, மேற்கு திசைகளில் நீள் சதுர வடிவில் உள்ளது. வடக்கு, தெற்கு திசைகளில் சற்று உள்நோக்கி வளைந்து குடம் போன்று உள்ளது.குளத்தைச் சுற்றிலும் 16 சிவன் கோயில்கள் உள்ளன. இதை சோடஷ மகாலிங்க கோயில்கள் என்பர்.சோடஷ என்றால் 16. இங்கு நீராடினால் 66 கோடி புனித தீர்த்தங்களில் நீராடிய பலன் கிடைக்கும்.