மின்கட்டணம் கட்ட இனிமேல் வரிசையில் நிற்க வேண்டாம்
மின்சார கட்டணம் செலுத்த செல்லும் நேரம் எல்லாம் மணிக்கணக்கில் வரிசையில் நிற்க வேண்டிய நிலை உள்ளது. அதிலும் மின்கட்டணம் செலுத்த கடைசி நாள் என்றால் கேட்கவே வேண்டாம். கூட்டம் அலைமோதும்
கம்ப்யூட்டர் வசதியுடன் கூடிய பில்கட்டும் முறை வந்தபின்னரும் வரிசை வேகமாக நகராது. இந்த நிலையில் மின் கட்டணம் கட்டுவதற்கு ஏற்கனவே ஆன்லைன் முறை இருக்கும் நிலையில் தற்போது TANGEDGO என்ற செயலியை மின்வாரியம் அறிமுகம் செய்துள்ளதுஜ்.
இந்தச் செயலியை கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். செயலியில் மின் இணைப்பிற்கான பதிவெண்ணைக் கொண்டு எளிதாக கட்டணத்தைச் செலுத்தலாம்.
மின்கட்டணம் செலுத்துவது மட்டுமின்றி மின் இணைப்பு கேட்டு விண்ணப்பித்தால் விரைவாக மின் இணைப்பு வழங்கவும் இந்த செயலி உதவுகிறது.