துறைமுகம் எம்.எல்.ஏ பழ.கருப்பையா அதிமுகவில் இருந்து நீக்கம். ஜெயலலிதா அதிரடி
கடந்த சில நாட்களுக்கு முன்னர் தொலைக்காட்சி ஒன்றில் பேட்டியளித்த நாஞ்சில் சம்பத், அதிமுக கட்சியின் பதவியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், நேற்று மற்றொரு அதிமுக பிரமுகராக பழ.கருப்பையா கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். பழ.கருப்பையா கட்சியின் கொள்கை-குறிக்கோள், கோட்பாட்டிற்கு முரணான வகையில் செயல்பட்டதால் அவர் நீக்கப்பட்டுள்ளதாக முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா கூறியுள்ளார்.
கடந்த 2011ஆம் ஆண்டு துறைமுகம் சட்டமன்ற தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பழ.கருப்பையா, சமீபத்தில் நடைபெற்ற துக்ளக் ஆண்டு விழாவில், ஆளுங்கடி அமைச்சர்கள் குறித்து அவதூறாக பேசியதாகவும், இதன் காரணமாகவே அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது.
தேர்தல் நெருங்கி வரும் நிலையில் நாஞ்சில் சம்பத், பழ.கருப்பையா என அடுத்தடுத்து அதிமுக பிரமுகர்கள் மீது ஜெயலலிதா நடவடிக்கை எடுத்து வருவது அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.